South Tamil Nadu: Heavy Rain Alert Today as Trough Persists; Northeast Monsoon Surge Expected Soon!
(Weather Analysis for November 12, 2025)
Good morning! This forecast is based on our personal weather analysis; please ensure you follow the Indian Meteorological Department and official government announcements for authoritative information.
Current Weather Snapshot
The atmospheric upper air circulation (வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி) that we tracked previously, which was expected to move slightly south of Sri Lanka from the central Bay of Bengal, is now persisting southeast of Sri Lanka. Concurrently, a high-pressure system (உயரழுத்தம்) is situated near the borders of Gujarat and Rajasthan. This high-pressure system is drawing in dry continental air (வரண்ட காற்று), which has extended its influence as far as North Tamil Nadu.
In North Tamil Nadu, the friction between this dry air and the Northeast winds resulted in rain being recorded in some areas yesterday, and similar conditions are expected to continue today. However, the easterly winds (கிழக்கு திசை காற்று) remain fully active across the Delta and Southern districts.
Significant Rainfall Recorded
Over the last 24 hours, rainfall was well recorded across many parts of South Tamil Nadu. Specifically, areas in the coastal districts saw light to moderate rain, while good rain was reported in the Western districts, particularly parts of Coimbatore and Tiruppur.
High Rainfall amounts included (in millimeters):
- Tenkasi (Sivalarkulam): 68.4 mm (the highest recorded).
- Thoothukudi (Sirakulam): 56 mm.
- Dindigul (Pushpathur): 52 mm.
- Theni (Kottakkudi) and Kanyakumari (Palur): Both recorded around 52 mm.
- Scattered moderate to heavy rain was recorded across several regions in South Tamil Nadu, including Kanyakumari, Tiruppur, Tenkasi, Thoothukudi, Tirunelveli, Ramanathapuram Virudhunagar, and Madurai.,
Today's Forecast (Next 24 Hours)
Due to the continued presence of the atmospheric circulation near Sri Lanka, convergence of winds (காற்று குவிதல்) is expected to be highest over the Southern Coastal districts.
Tamil Nadu Hotspots (Heavy to Very Heavy Rain Possible): The Southern districts are the primary hotspots for rain today. We expect moderate to heavy rain, similar to yesterday, in Nagercoil and Kanyakumari. Furthermore, Tirunelveli, Thoothukudi, and Ramanathapuram districts (including Rameswaram) are identified as hotspots today, with possibilities for heavy rain to even very heavy rain (பலத்த மழை).
Moderate Rain Expected: Moderate rain, which may turn heavy in some parts, is also expected in several districts across Central and Western Tamil Nadu, including Nagapattinam, Thiruvarur, Thanjavur, Pudukkottai, Karur, Sivagangai, Madurai, Virudhunagar, Theni, Dindigul, Namakkal, Krishnagiri, Dharmapuri, Erode, Tiruppur, Coimbatore, and The Nilgiris.
Light Rain Chances: Light rain is possible in Chennai, Tiruvallur, Kanchipuram, Chengalpattu, Villupuram, Puducherry, Cuddalore, Mayiladuthurai, Ariyalur, Perambalur, Kallakurichi, Tiruvannamalai, Ranipet, Vellore, Tirupathur, and the eastern parts of Krishnagiri, Dharmapuri, and Salem. The southern parts of Tiruchirappalli may experience moderate rain.
Neighboring States:
- Kerala: Moderate to heavy rain, and potentially very heavy rain (பலத்த மழை), is likely in parts of Thiruvananthapuram. Moderate to heavy rain is expected in Kollam, Pathanamthitta, Idukki, Kottayam, Alappuzha, Ernakulam, Thrissur, Palakkad, and Malappuram districts, with lighter rain expected in Wayanad, Kozhikode, Kannur, and Kasaragod.
- Karnataka: Scattered moderate rain is likely in districts like Kolar, Chikkaballapur, Bengaluru, Ramanagara, Mandya, Chamarajanagar, Mysore, and Kodagu. Lighter rain is possible in Tumakuru, Chitradurga, Davangere, Shivamogga, Udupi, Dakshina Kannada, Chikkamagaluru, and Hassan.
- Andhra Pradesh: Mostly dry weather is expected, though light rain is possible in isolated pockets of Chittoor, Tirupati, Nellore, Kavali, and Prakasam districts.
The Return of the Northeast Monsoon Surge
For those wondering about the Northeast Monsoon for the North Coastal districts, patience is key. Isolated rain chances will continue in the coming days.
Crucially, starting November 15th, the easterly winds are expected to turn fully towards Tamil Nadu. The 'Fungwong' cyclone (புயலானது), currently in the South China Sea, is expected to weaken completely starting tonight (after this evening/night). Following this, the easterly winds (கிழக்கு திசை காற்று) will begin to travel toward Tamil Nadu across the Bay of Bengal starting in next 3 days.
This anticipated weather change involves a moisture-laden air surge (ஈரமிகுத்து காற்று/Surge). Furthermore, one or two disturbances (சலனங்கள்) are expected to form in the Bay of Bengal near the Sri Lankan - Indonesia coast.
When these systems develop, the easterly winds will strike the coastal areas of Tamil Nadu with full force. This means:
- November 16th/17th: Rain associated with the easterly winds will first affect the Delta and South Coastal regions.
- From November 17th: Rain, including that from atmospheric disturbances (சலனம் சார்ந்த மழை), is expected in the North Coastal regions, including Chennai.
The latter half of November holds prospects for good rainfall. We must wait and watch how effectively these factors materialize. Remember, weather is subject to change.
**தென்தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கான வாய்ப்பு! - சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை வருகை! (நவம்பர் 12, 2025)**
**வணக்கம்!**
இது என் தனிப்பட்ட வாநிலை அனுமானம். அதிகாரப்பூர்வ வாநிலை முன்னறிவிப்பு மற்றும் தகவல்களுக்கு இந்திய வாநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் அரசு சார் அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்.
### தற்போதைய வாநிலை நிலவரங்கள்
நாம் நேற்று பார்த்த அந்த வளிமண்டல மேலெடுக்கு சுழற்சியானது (டிராப் அமைப்பு), மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து சற்று இலங்கை கீழாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது இலங்கைக்கு **தென்கிழக்காக** நீடிக்கிறது.
அதேநேரத்தில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஒட்டிய பகுதிகளில் ஒரு **உயரழுத்தம்** (High Pressure) நிலை கொண்டுள்ளது. இந்த உயரழுத்தத்திலிருந்து வரக்கூடிய வரண்ட காற்று (ட்ரை கான்டினென்டல் ஏர்) வடதமிழகம் வரலையும் நீண்டிருக்கிறது.
* வடதமிழகத்தில், இந்த வரண்ட காற்றும் வடகிழக்கு காற்றும் உராய்ந்ததன் காரணமாக, நேற்று சில பகுதிகளில் மழையானது பதிவானது, அதேபோன்ற அமைப்பு இன்றும் தொடரும்.
* ஆனால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் **கிழக்கு திசை காற்று** முழுவதுமாக தொடர்ந்து நீடிக்கிறது.
### கடந்த 24 மணி நேர மழை அளவு விவரங்கள்
கடந்த 24 மணி நேரத்தில், தென்மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் **நல்ல மழை** பதிவாகி இருக்கிறது. மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலும் சில பகுதிகளில் நல்ல மழை பதிவாகி உள்ளது.
பதிவான அதிகபட்ச மழை அளவுகள் (மில்லிமீட்டரில்):
* **தென்காசி (சிவலர் குளம்):** 68.4 mm (இதுவரை அதிகமா பதிவாகி இருக்கிறது)
* **தூத்துக்குடி (சிரக்குளம்):** 56 mm
* **திண்டுக்கல் (புஷ்பாத்தூர்):** 52 mm
* **தேனி (கோட்டக்குடி) மற்றும் கன்னியாகுமரி (பாலூர்):** இரண்டும் கிட்டத்தட்ட 52 mm அளவில் பதிவாகி உள்ளன.
* மேலும், திருநெல்வேலி (மானூர் 38.8 mm), ராமநாதபுரம் (கிழியூர் 38 mm), விருதுநகர் (பந்தல்குடி 37.6 mm), மற்றும் மதுரை (குறையூர் 35.6 mm) ஆகிய பகுதிகளிலும் **மிதமானது முதல் கனமழை** வரையும் பரவலாத் தென்தமிழகத்தில் பதிவாகி உள்ளது.
### அடுத்த 24 மணி நேர வாநிலை முன்னறிவிப்பு
வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி இலங்கை அருகே நீடிப்பதால், காற்று குவிதல் (Convergence) பெரும்பாலும் தென் கடலோர மாவட்டங்களில்தான் அதிகமாய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களே மழைக்கான முக்கிய ஹாட்ஸ்பாட்டாக உள்ளன.
**கனமழை முதல் பலத்த மழைக்கான வாய்ப்புள்ள பகுதிகள்:**
* நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று மாதிரி இன்றும் **மிதமானது முதல் கனமழை** வரலையும் பதிவாகும்.
* இன்று, **திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் (ராமேஸ்வரம் உட்பட)** ஹாட்ஸ்பாட்டாக உள்ளன. இப்பகுதிகளில் **கனமழை முதல் பலத்த மழை கூட** பதிவாகறதுக்கான சாத்திய கூறுகள் இருக்கும்.
**மிதமான மழைக்கான வாய்ப்புள்ள பகுதிகள்:**
* நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி (மேற்கு பகுதிகள்), ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக **மிதமான மழை**, சில பகுதிகளில் கனமழையாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கக்கூடும்.
**லேசான மழைக்கான வாய்ப்புள்ள பகுதிகள்:**
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வெல்லூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி (கிழக்கு மாவட்டங்கள்), சேலம் (கிழக்கு மாவட்டம்), மற்றும் திருச்சிராப்பள்ளியின் சில பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்புகள் இருக்கக்கூடும். (திருச்சியின் தென் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு உள்ளது).
**அண்டை மாநிலங்கள்:**
* **கேரளா:** திருவனந்தபுரத்தில் கனமழை முதல் பலத்த மழை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், கொல்லம், பத்தினம் திட்டா, இடுக்கி, கோட்டையம், அழப்பி, எர்ணாகுளம், திருசூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமடையும் பதிவாகலாம்.
* **கர்நாடகா:** கோளார், சிக்பலாபூர், பெங்களூர், மாண்டியா, மைசூர், கொலகு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை இருக்க வாய்ப்புள்ளது.
* **ஆந்திரா:** பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வாநிலைக்கான வாய்ப்புகள் அதிகம். சித்தூர், திருப்பதி, நெல்லூர், காவாலி, பிரகாசம் மாவட்டங்களில் மட்டும் லேசான மழை ஒரு சில பகுதிகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
### வடகிழக்கு பருவமழைக்கான 'சர்ஜ்' விரைவில்!
வட கடலோர பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழையே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். சற்று பொறுமை முக்கியம். வரக்கூடிய நாட்களில் ஐசோலேட்டட் ரெயின் சான்சஸ் தான் தொடரும்.
முக்கியமாக, **நவம்பர் 15ஆம் தேதி முதல்** கிழக்கு திசை காற்று முற்றிலுமாக தமிழகத்தை நோக்கித் திரும்பும்.
1. தென்சீன கடல் பகுதிகளில் இருக்கும் 'பங்குவாங்(பியூங்வ்வ்ங்)' புயலானது இன்று மாலை அல்லது இரவுக்குப் பிறகு முழுவதும் வழுவிழக்க ஆரம்பிக்கும்.
2. அதன் பிறகு நாளை மற்றும் நாளை மறுநாளில் தென்சீன கடல் பகுதிகளிலிருந்து கிழக்கு திசை காற்று **வங்கக்கடல் ஊடாக** நம் தமிழகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்.
3. 15ஆம் தேதி முதல் வரக்கூடிய வடகிழக்கு பருவக்காற்றினுடைய தாக்கமான **ஈரமிகுத்து காற்று (Surge)** வரவிருக்கிறது.
4. அதேநேரத்தில், இலங்கை ஒட்டிய கடலோர பகுதிகளில் - இந்தோனேஷியா கடல் பகுதியில் இடையே ஒன்றல்லது இரண்டு சலனங்கள் உருவாக இருக்கிறது.
5. இந்த அமைப்புகள் உருவாகும் பொழுது, கிழக்கு திசை காற்று முழு வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளைத் தாக்கும்.
**மழைக்கான எதிர்பார்க்கப்படும் காலக்கோடு:**
* **நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி முதல்:** டெல்டா மற்றும் தென் கடலோர பகுதிகளில் கிழக்கு திசை காற்று காரணமாக மழை எதிர்பார்க்கப்படுகிறது.
* **நவம்பர் 17ஆம் தேதி முதல்:** சலனம் சார்ந்த மழையும், சென்னை உட்பட வட கடலோர பகுதிகளில் இருக்கப் போகிறது.
பின் பகுதி நவம்பர் பொறுத்தவரையிலும் **நல்ல மழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது**. இது எந்த அளவுக்கு மெட்டீரியலைஸ் ஆகப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வானிலை மாறுதல்களுக்கு உட்பட்டதுதான்.
இந்த பதிவு உங்களுக்கு பல புரிதல்களை கொடுத்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பதிவை லைக் பண்ணிட்டு ஷேர் பண்ணுங்க. நன்றி வணக்கம்!
#Thunderstorms #Rains #Keralarains #Karntakarains #TNRains #ChennaiRains #KTCC #Masrainman #Kerala #Karnataka #Bengaluru #HyderabadRains #Telangana #Andhrapradesh #Chennai #NEM2025
