Weather Watch: Heavy Rains Recede Slightly, But Another Low-Pressure System Looms by Nov 22nd!
(Date of Analysis: November 19, 2025)
Good morning! This forecast offers a comprehensive analysis of the weather conditions for November 19, 2025, based on current atmospheric patterns. Please note that this is a personal weather analysis (வானிலை அனுமானம்). For official weather forecasts and information, please follow the Indian Meteorological Department (IMD) and government announcements.
🌧️ Rainfall Recap: Southern Districts Drenched
Over the past 24 hours, widespread moderate to heavy rain was recorded across coastal districts and South Tamil Nadu. Heavy rainfall (கனமழை) was particularly concentrated in the regions of Tenkasi, Tirunelveli, Thoothukudi, and Kanyakumari.
Several locations reported impressive accumulation:
- Tenkasi Aykudi led the charts with 120 mm.
- Sengottai recorded 111 mm.
- Tenkasi Town saw 110 mm.
- Other significant numbers included Thevarkulam (104 mm), Muneerpallam (103 mm), and Suthamalli (Tirunelveli) (92.4 mm).
- In Thoothukudi, Panambarai recorded 88.4 mm, while Cherakulam received 73.2 mm.
- Chennai also received notable rainfall in isolated pockets, with Tiruvottiyur recording 59.4 mm and Perambur 55.5 mm.
🧭 Current Atmospheric Status (November 19)
The weather system responsible for the intense rain yesterday has shifted. The low-pressure area (தாழ்வு பகுதி) that was situated near the Comorin Sea and Sri Lanka has moved westwards and is currently lingering near the Lakshadweep islands.
The overall structure of the Intertropical Convergence Zone (ITCZ) and its associated trough extends from Sri Lanka straight across towards Indonesia. As a result, easterly winds (கிழக்கு திசை காற்று) are dominant over the Bay of Bengal, bringing humid air (ஈரதிசை காற்று).
On the Radar: Currently, radar images show rain clouds are widespread from Pondicherry down to Vedaranyam. Rain is actively falling in the coastal areas of Pondicherry and Cuddalore. Rain is also occurring in Thiruvarur district, with possibilities for moderate to heavy intensity.
📝 Today's Forecast (November 19, 2025)
While today is likely to see rain, the intense, large-scale heavy rain episodes experienced yesterday are expected to be slightly reduced.
Tamil Nadu & Puducherry:
- Coastal Regions: Moderate to heavy rain is expected to continue across coastal areas of Chengalpattu, Villupuram, Pondicherry, Cuddalore, Mayiladuthurai, Nagapattinam, and Karaikal.
- Southern Tamil Nadu: Moderate to heavy rain is still expected in Theni, Virudhunagar, Ramanathapuram, Tenkasi, Thoothukudi, Tirunelveli, and Kanyakumari districts.
- Western Ghats & Hills: Heavy rain is also likely in the Nilgiris district and the western parts of Coimbatore.
- Inland Areas: Lighter to moderate rain is expected in many inland districts, including Krishnagiri, Dharmapuri, Salem, Erode, Namakkal, Dindigul, Madurai, Sivaganga, Thanjavur, and Trichy.
- Chennai: Chennai and its surrounding districts (Tiruvallur, Kanchipuram) may experience rain today, but it is expected to be light to moderate and intermittent.
Kerala:
Kerala will experience widespread moderate to heavy rain in districts like Thiruvananthapuram, Kollam, Idukki, Ernakulam, Thrissur, Malappuram, Kozhikode, and Kannur. Light to moderate rain is likely in Palakkad, Wayanad, and Kasaragod.
Karnataka & Andhra Pradesh:
Light rain is forecast for North inland Karnataka districts, including Bangalore, Mysore, and Kolar. Andhra Pradesh regions, including Tirupati, Nellore, and Chittoor, can expect light to moderate rain.
🚨 Looking Ahead: The Next System
Attention turns to the next weather development, which is expected to bring increased rainfall to the Cuddalore district starting tomorrow (November 20).
Crucially, within the next 48 hours (around November 21st), a new low-pressure area (குறைந்த காற்றெழுத்து தாழ் பகுதி) is expected to form. This system will emerge in the region between Indonesia and Sri Lanka. The development is attributed to a continued region of thermal convergence (வெப்ப குவிதல் பகுதி). This convergence is expected to generate a circulation that will deepen, potentially turning into an upper-air cyclonic circulation tomorrow, and eventually forming the low-pressure area by the 22nd.About for the Chakram Update still there is no much conses with the models as we need to wait for some time to conclude.
Stay updated and safe!
🔴கொட்டித்தீர்த்த கனமழை | இன்றும் கனமழைக்கு வாய்ப்பு எங்கே?| மீண்டும் அடுத்த தாழ்வுப்பகுதி ? வானிலை அப்டேட்
**(வானிலை அனுமானம்: நவம்பர் 19, 2025)**
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இது என் தனிப்பட்ட வானிலை அனுமானம். அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்பு மற்றும் தகவல்களுக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் அரசு அறிவிப்புகளைப் பின்தொடருங்கள்.
***
### 🌧️ கடந்த 24 மணி நேர மழைப் பதிவு
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, **தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் குமரி** (கன்னியாகுமரி) பகுதிகளில் கனமழை பதிவாகி இருக்கிறது.
பதிவான முக்கிய மழை அளவுகள் பின்வருமாறு:
* **தென்காசி ஆய்க்குடி:** 120 மில்லிமீட்டர்.
* செங்கோட்டை: 111 மில்லிமீட்டர்.
* தென்காசி டவுன்: 110 மில்லிமீட்டர்.
* தேவர்குளம் 104 மில்லிமீட்டர், முனீர் பள்ளம் 103 மில்லிமீட்டர்.
* சுத்தமல்லி (திருநெல்வேலி) 92.4 மில்லிமீட்டர்.
* தூத்துக்குடியில் பணம்பாறை 88.4 மில்லிமீட்டர், சேரக்குளம் 73.2 மில்லிமீட்டர்.
* சென்னையில் திருவொற்றியூர் 59.4 மில்லிமீட்டர், பெரம்பூர் 55.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
கடலோர மாவட்டங்களிலும் தென்தமிழகத்திலும் பரவலாக **மிதமானது முதல் கனமழை** வரை பதிவாகி இருக்கிறது.
***
### 🧭 தற்போதைய வானிலை நிலைமை (நவம்பர் 19)
நேற்று குமரிக்கடல் பகுதி இலங்கை ஓட்டி நிலைத்திருந்த தாழ்வு பகுதி (குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி) மேலும் மேற்காக நகர்ந்து, தற்போது **இலட்சத்தீவுகளுக்கு அருகாமையில்** தாழ்வு பகுதியாகவே நீடிக்கிறது.
இதன் தாழ்வமைப்பும், ஐடிசிஜெட் (ITCZ)-இன் தாழ்வமைப்பும் இலங்கையிலிருந்து அப்படியே இந்தோனேசியா வரையிலும் பரவி இருக்கிறது.வங்கக்கடல் பகுதிகளில் முழுவதுமாக **கிழக்கு திசை காற்று** காணப்படுகிறது.
**ரேடார் நிலை:** தற்போது ரேடார் அமைப்பை நாம் பார்த்தால், பாண்டிச்சேரியிலிருந்து கீழே வேதாரண்யம் வரையிலும் **பரவலாக மழை மேகங்கள்** காணப்படுகின்றன. வங்கக்கடல் பகுதிகளில் இருந்து ஈர்க்கப்படும் ஈர்மிகு காற்றின் சுழற்சியால், புதுச்சேரி கடலோர பகுதிகளிலும், கடலூர் கடலோர பகுதிகளிலும் மழை பதிவாகிறது.
தற்போதைய நிலவரப்படி, திருவாரூர் மாவட்டத்திலும் மழை பதிவாகி வருகிறது.
***
### 📝 இன்றைய வானிலை முன்னறிவிப்பு (நவம்பர் 19, 2025)
இன்று மழை இருந்தாலும், நேற்றைய தினம் பதிவானது மாதிரியான ஒரு **பெரிய கனமழை எபிசோடு** கொஞ்சம் இன்று குறைவாக இருக்க வாய்ப்புகள் இருக்கும்.
#### **தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி:**
* **கடலோரப் பகுதிகள்:** செங்கல்பட்டு, விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை (நாகப்பட்டினம்) மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் பரவலாக **மிதமானது முதல் கனமழை** தொடர வாய்ப்புள்ளது.
* **தென் தமிழகம்:** தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இன்றும் மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பிருக்கிறது.
* **மேற்குப் பகுதிகள்:** நீலகிரி மாவட்டமாகட்டும், கோவை மேற்குப் பகுதிகளிலும் கனமழை பதிவாவதற்கு வாய்ப்புகள் இருக்கு.
* **உட்புற மாவட்டங்கள்:** கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய உட்புற மாவட்டங்களில் வரக்கூடிய மணி நேரங்களில் **லேசானது முதல் மிதமான மழைக்கு** வாய்ப்புகள் இருக்கும்.
* **சென்னை:** சென்னை மாவட்டத்தில் இன்றும் மழை இருக்கும், ஆனால் இடைவெளி விட்டுப் பதிவாவதற்கான வாய்ப்புகள் **லேசான மழை அல்லது மிதமான மழை** வரையிலும் மட்டுமே இருக்கும்.
#### **கேரளா:**
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், இடுக்கி, எர்ணாகுளம், திருசூர், அலப்புழா, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இன்றும் பரவலாக **மிதமானது முதல் கனமான மழைக்கு** வாய்ப்புகள் இருக்கும். பாலக்காடு, வயநாடு, காசர்கோடு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருக்கும்.
#### **ஆந்திரா & கர்நாடகா:**
கர்நாடகா வட உட்புற மாவட்டங்களான பெங்களூர், மைசூர், கோளார் உள்ளிட்ட பகுதிகளில் **லேசான மழைக்கு** வாய்ப்புகள் இருக்கும். ஆந்திராவில் திருப்பதி, நெல்லூர், சித்தூர் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருக்கும்.
***
### 🚨 அடுத்த அமைப்பு: நவம்பர் 21-ல் தாழ்வு பகுதி!
நாளை முதல் (நவம்பர் 20) மீண்டும் மழை **கடலூர் மாவட்டங்களில் அதிகரிக்க** இருக்கிறது.
சுமார் **22ஆம் தேதி**, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட பகுதிகளில் **மீண்டும் ஒரு குறைந்த காற்றெழுத்து தாழ் பகுதி** ஆனது உருவாக இருக்கிறது. இதற்குக் காரணம், இந்த தாழி அமைப்பு மற்றும் **வெப்ப குவிதல் பகுதி** (Thermal Convergence Zone) தொடர்ந்து நீடிப்பதே ஆகும். இந்த வெப்ப குவிதல் பகுதியில் , நாளை ஒரு வளிமண்டல மேலெடுக்கு சுழற்சியாக உருவாகி , (22ஆம் தேதி) அது ஒரு குறைந்த காற்றெழுத்த தாழ் பகுதியாக அந்த பகுதிகளில் உருவாகி தமிழகத்தை நோக்கி இலங்கை ஊடக பயணிக்க இருக்கிறது.மேலும் மழை நிகழ்வுகள் தொடரும்.
***
தொடர்ந்து நிகழ்நேர அப்டேட்களுக்கு நம்முடைய சமூக ஊடகங்களில் பின்தொடரலாம். நன்றி, வணக்கம்!.
#Thunderstorms #Rains #Keralarains #Karntakarains #TNRains #ChennaiRains #KTCC #Masrainman #Kerala #Karnataka #Bengaluru #HyderabadRains #Telangana #Andhrapradesh #Chennai #NEM2025 #CycloneSenyar
