இலங்கையில் கடந்துவரும் தாழ்வுமண்டலம் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை !!!

MASRainman
0

May your Christmas sparkle with moments of love, laughter and goodwill. And may the year ahead be full of contentment and joy. Have a Merry Christmas!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது இலங்கை பாட்டில்கோடா திரிகோணமலை இடைப்பட்ட பகுதிகளில் கடந்து வருகிறது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்குள்  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நன்கு அமைந்த தாழ்வு பகுதி அல்லது தாழ்வு மண்டலமாக இது கன்னியாகுமரி கடல் பகுதியை கடந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக 35 முதல் 45 கிலோ மீட்டர் காற்று தரைக்காற்று தமிழகம் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் வீசக்கூடும்.ஆகவே மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடுகு செல்லவேண்டாம்.


 மிக கனமழை இலங்கையில் & தமிழ்நாடு 

-------------------------------------------------------------------

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று நாளை மிக கனமழை இருக்கக் கூடும் தமிழகத்தில் இன்று முதல் 29ம்  தேதி வரை பரவலாக மிதமானது முதல் கனமழை பல பகுதிகளில் பதிவாகும். குறிப்பாக தென் மாவட்டங்கள் #ராமநாதபுரம் #கன்னியாகுமரி #தூத்துக்குடி #விருதுநகர் #தென்காசி #மதுரை #திண்டுக்கல் #ராமநாதபுரம் #புதுக்கோட்டை #பட்டுக்கோட்டை #நாகை மாவட்டம் #மயிலாடுதுறை #திருவாரூர் #தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பதிவாகலாம்.சில பகுதிகளில் மிக கனமழை அடுத்த மூன்று நாட்கள் பதிவாக வாய்ப்புகள் உள்ளது. 


வட மாவட்டங்கள் பொருத்தவரை(சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் வேலூர் பாண்டிச்சேரி ) இன்று நாளை மிதமான மழையாக வாய்ப்புகள் உள்ளன. 28ம் தேதி முதல் வறண்ட காற்றின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக வரக்கூடும். முதலில் வட தமிழகத்தில் மழை தாக்கம் குறையும் பின்பு தென் தமிழகத்தில் 30 ஆம் தேதிக்கு பிறகு மழையின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.


வரக்கூடிய இந்த மழையின் காரணமாக தென் தமிழக பகுதிகளில் நிலவும்  வடகிழக்கு பருவ மழையின் பற்றாக்குறையானது நிவர்த்தி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 பலத்த மழை அறிவிப்பு குறிப்பாக தென் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மாஞ்சோலை பாபநாசம் மணிமுத்தாறு வால்பாறை தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விருதுநகரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மிக விழிப்புடன் அடுத்த நான்கு நாட்கள் இருக்க வேண்டும். இந்த பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. #98B #Srilanka #Tamilnadu #HeavyRains

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…