குமரிகடல் பகுதி நோக்கி நகரும் தாழ்வு பகுதி தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை?

MASRainman
0

WML off Srilanka coast moving towards Arabian Sea via KK coast,Influence of this Strong Easterly Surge will give I.Heavy Rains in SouthTamilnadu & Kerala for next 24 hrs.#Chennai #Ktcc may see gradual reduction in rains.  

இலங்கை அருகே கரை கடந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது குமரிக்கடல்  பகுதியை நோக்கி ஒரு தாழ்வு பகுதியாக  வலுவிழந்து நகர ஆரம்பித்திருக்கிறது. மேலும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அரபிக் கடலுக்குள் வரும் மணிநேரங்களில் செல்லக்கூடும். இதன் காரணமாக ஈர்க்கப்படும் ஈரமிகு கிழக்கு திசை காற்று காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி விருதுநகர் ராமநாதபுரம் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.






மாஞ்சோலை பாபநாசம் கழுகுமலை குற்றாலம் வால்பாறை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் இன்று முதல் மழையின் தாக்கம் குறையக்கூடும். பாண்டிச்சேரி முதல் டெல்டா மாவட்டங்கள் பெரும்பாலான பகுதிகள் கொங்கு பகுதிகளில் பரவலாக இன்றும் மிதமானது முதல் கனமழை பதிவாக வாய்ப்புகள் இருக்கின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…