மேற்கத்திய கலக்கமும் வலுப்பெறும் தாழ்வுநிலையும் அடுத்து என்ன நடக்கும்? மழை வருமா வராதா ?
98B - நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி & மேற்கத்திய கலக்கம் இடையூறு காரணமாக இன்று வட/வடகிழக்கு திசையில் நகர்ந்து தாழ்வுமண்டலமாக வலுபெறக்கூடும்.
Credits Windy |
இந்த மேற்க்கத்திய கலக்கம் வராமலிருந்திருந்தால் இந்தநேரம் தமிழகத்தில் நல்ல மழை கிடைத்திருக்கும்.
Credits Ecmwf,Weathermodels |
24ம் தேதி மேற்கத்திய கலக்கத்திலிருந்து விடுபட்டு அரேபிய உயரழுத்தம் காரணமாக இந்த நிகழ்வு மீண்டும் தென்கிழக்கு திசையில் நகர்ந்து இலங்கை ஊடாக கணையாகுமாரி கடலோரத்தை கடந்து அரேபிய கடலை நோக்கி பயணிக்கும்.
Credtis Tropicaltitbits |
சென்னை மட்டுமின்றி கடலோரப் பகுதிகள், தமிழகத்தின் உள்பகுதிகள், தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலும் 25ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மழை பெய்யும். (கன்னியாகுமரி,திருநெல்வேலி,ராமநாதபுரம் , தூத்துக்குடி,விருதுநகர் , தென்காசி & டெல்டா ) நல்ல மழை பெறக்கூடிய மாவட்டங்கள்
----------------------------------
ஓகி புயல் போன்ற புயல் குமரி கடலை கடக்கும் போது வாய்ப்பு இல்லை, ஆனால் கடல் சீற்றமாக இருக்கும். மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் IMD எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
----------------------
டிசம்பர் 24 முதல் 29 வரை மழை பெய்யக் கூடும் என்றாலும், மழை பெய்தாலும் விடுமுறைப் பயணங்களைத் தொடரலாம்.மேலும் விவரங்களுக்கு எங்களது வானிலை வளத்தை காணவும்.
Today Rainfall Estimate - Kerala