வங்கக்கடலில் உருவாகும் புயல் எங்கே கரையை கடக்கும்? கனமழை வாய்ப்பு உண்டா?

MASRainman
0

 வங்கக்கடலில் உருவாகும் புயல் எங்கே கரையை கடக்கும்? கனமழை வாய்ப்பு உண்டா?

Publish Date 28.11.2023


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. | குறள் எண் – 423


 வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தாழ்வு நிலை மற்றும் தென்கிழக்கு இலங்கை அருகே ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இந்த இரு சுழற்சிகள் காரணமாக இந்த தாழ்வு நிலை வலுப்பெற்றுவதில் சற்று கால தாமதம் ஏற்படும். மேலும் அடுத்த 24 - 48 மணி நேரத்திற்குள்ளாக இது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வட/வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமானுக்கு. வடமேற்கு திசையில் இது  நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 1ம் தேதி இது புயலாகவும்  2/3ம்  இது தீவிர புயலாகவும் வலுப்பெற்று தமிழக/ஆந்திர கடலோரத்தை நெருங்கும்  என்று எதிர்பார்க்கலாம். இது கரையை கடக்கும் இடம் பின்னர் அப்டேட் செய்யப்படும் 


 ஒரு  புயல் உருவாக வேண்டுமென்றால். அதற்கு  சாதகமான  அலைவுகள் மிக முக்கியம். அதன்படி இன்று. இருவேறு அலைவுகள்  MJO & ER என்க்கூடிய வங்கக்கடலில் சாதகமான ஒரு சூழலில் காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த தாழ்வு பகுதியானது ஒரு புயலாகவும், தீவிர புயலாகவும் அல்லது அதி தீவிர புயலாகவும் தீவிரம் அடைய வாய்ப்புகள் உண்டு.


அரேபிய உயரழுத்தம். பசிபிக் உயரழுத்தம் மற்றும் மேற்கத்திய கலக்கம் ஆகிய இந்த மூன்று காரணிகள் காரணமாக இந்த சலனம்   மேலும் வட வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்துக்கு மிக அருகில் அதுவும் சென்னைக்கு மிக அருகில் வந்து பின்பு  இது தென் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு . மேலும் இது மேற்கத்திய கலக்கம் காரணமாககரையை கடக்கும் பகுதிகள் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது நிகழ்நேர கணிப்புகளின் அடிப்படையில் 24 அல்லது 32 மணிநேரத்திற்கு முன்பு மட்டுமே கணிக்க இயலும்.



 மேலே குறிப்பிடப்பட்டுள்ள காணொளியில் பசிபிக் உயரழுத்தம் அரேபிய உயர் அழுத்தம் மற்றும் மேற்கத்திய கலக்கம் அதன் இடர்பாடுகள் பற்றின முழு விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


 வானிலை படிமங்களின் வாரத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் ECMWF Weeklies - Numeric Weather Model   அதன் இன்றைய கணிப்பு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம். மற்றும் விஜயவாடா இடைப்பட்ட பகுதிகளில் இது கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாற்றங்களுக்கு  உட்பட்டது.

 இந்த சலனம்  சார்ந்த மழை தமிழகத்திற்கு குறிப்பாக வட மாவட்டங்கள் சென்னை உட்பட எப்படி பதிவாக போகிறது என்பது இந்த சலனம்  எவ்வாறு நம்மை நோக்கி அருகில் நகர்ந்து வருகிறது என்பதை பொறுத்து மட்டுமே குறிப்பிட முடியும். அது சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதற்கிடையில் அடுத்த மூன்று தினங்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்புறப் பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழையானது தொடரும். மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புள்ள பகுதிகள் பத்தின அப்டேட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Tamil Video Update : https://youtu.be/9vKPLgd6o5g


Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…